பிரபல ஹோட்டல்..வாங்கிய சிக்கனில் கிடந்த கண்ணாடி துகள் - கஸ்டமர் வாயில் வழிந்த ரத்தம்!
ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் உடைந்த கண்ணாடி துண்டுகள் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
சிக்கனில்..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை சாலையில் பிரபலமான ஆசிப் பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு முகமது பாரித் என்பவர் பெப்பர் பார்பிக்யூ சிக்கனை வீட்டுக்கு பார்சல் வாங்கி சென்றுள்ளார்.
வீட்டுக்கு சென்று சிக்கனை சாப்பிட்ட போது, வாயில் இருந்து திடீரென ரத்தம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிக்கன் உள்ளே பார்த்தபோது, உடைந்த கண்ணாடி துண்டுகள் ஏராளமாக கிடந்துள்ளது.
இது குறித்து முகமது பாரித் ஹோட்டலுக்கு சென்று ஊழியர்களிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, தண்ணீர் இருந்த கண்ணாடி பாட்டில் சமையலறையில் விழுந்து உடைந்து விட்டதாகவும்,
வழிந்த ரத்தம்
இதில் உடைந்த கண்ணாடி துண்டுகள் மசாலா பாத்திரத்திற்குள் விழுந்ததை பார்க்காமல், அப்படியே சிக்கனில் தடவி பொரித்து விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முகமது பாரித் உணவுப் பாதுகாப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டர். அப்போது கெட்டுப்போன 6 கிலோ சிக்கன் மற்றும் 50 அழுகிய முட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.