கால் மரத்து போகுது; சொன்னது அமைச்சர் செந்தில் பாலாஜி - நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

V. Senthil Balaji Tamil nadu
By Sumathi Aug 29, 2023 03:28 AM GMT
Report

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். எம்.எல்.ஏ மற்றும் எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது.

கால் மரத்து போகுது; சொன்னது அமைச்சர் செந்தில் பாலாஜி - நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா? | Custody For Senthil Balaji Extended

அவரிடம் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, இனி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும்,

காவல் நீட்டிப்பு

காணொலி காட்சி வாயிலாக ஆஜராகலாம் எனவும் கூறினார். மேலும், ஜாமின் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் அனுமதி அளித்தார்.

கால் மரத்து போகுது; சொன்னது அமைச்சர் செந்தில் பாலாஜி - நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா? | Custody For Senthil Balaji Extended

இதற்கிடையில், நீதிபதியிடம் கால் மரத்துப்போவதாக செந்தில்பாலாஜி கூறியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் பரணி குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஜாமின் கோரி விரைவில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் கூறியுள்ளார்.