இந்திய வீரர்களுக்கு திறமை இல்லை.. யாரையும் சேர்க்க மாட்டேன் - சீண்டும் பேட் கம்மின்ஸ்!

Indian Cricket Team Australia Cricket Team Pat Cummins
By Swetha Nov 20, 2024 04:30 PM GMT
Report

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய வீரர்கள் குறித்து பேசியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்திய வீரர்கள்

விரைவில் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான விளையாட்டு தொடர் நடக்கவிருக்கும் நிலையில், விளம்பரப் பணிகளில் ஒளிபரப்பாளர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே இந்த தொடருக்கான பயிற்சி, திட்டமிடல் உள்ளிட்டவையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்திய வீரர்களுக்கு திறமை இல்லை.. யாரையும் சேர்க்க மாட்டேன் - சீண்டும் பேட் கம்மின்ஸ்! | Cummins Said No Indian Players In Australia Team

இந்த சூழலில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ணி வீரர்களுக்கு இடையில் வார்த்தை மோதல்கள் தொடங்கியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா பத்திரிகைகள் விராட் கோலியை ஹீரோ போல் கொண்டாடி வருவதை அந்நாட்டு வீரர்கள் ரசிக்கவில்லை.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் மார்ஷ் ஒப்பனாக கேலி செய்திருபார். தற்போது ஆஸ்திரேலியா அணியில் ஒரேயொரு இந்திய வீரரை சேர்க்க வேண்டும் என்றால், எந்த வீரரை சேர்ப்பீர்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பதில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

பாண்டிங் செய்த செயல்; வெறி கொண்ட கோலி - ஷேன் லீ எச்சரிக்கை!

பாண்டிங் செய்த செயல்; வெறி கொண்ட கோலி - ஷேன் லீ எச்சரிக்கை!

பேட் கம்மின்ஸ்

அதாவது இந்த கேள்விக்கு டிராவிஸ் ஹெட் கூறியதாவது, ரோஹித் சர்மாவை தான் தேர்வு செய்வேன். அவரின் பேட்டிங் ஸ்டைல் கூடுதல் அதிரடியாக இருக்கிறது. வழக்கமாகவே எனக்கு அதிரடியாக விளையாடுவோரை பிடிக்கும்.

இந்திய வீரர்களுக்கு திறமை இல்லை.. யாரையும் சேர்க்க மாட்டேன் - சீண்டும் பேட் கம்மின்ஸ்! | Cummins Said No Indian Players In Australia Team

அதேபோல் இந்த கேள்விக்கு விராட் கோலியின் பெயர் பதிலாக வரும் நினைப்பீர்கள். ஆனால் நான் ரோஹித் சர்மாவை தேர்வு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் மிட்சல் மார்ஷ் பேசுகையில், ரிஷப் பண்ட் தான். நம்பர் 5ல் விளையாடுவதோடு இளம் வீரராக இருக்கிறார்.

டெல்லி அணிக்காக விளையாடிய போது அவர் தான் என் கேப்டன் என்று கூறியுள்ளார். மேலும், தன் லயன் பேசுகையில், நான் நிச்சயம் விராட் கோலியை தேர்வு செய்வேன். ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித்,

லபுஷேன் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் இருந்தால், மிகவும் வலுவான பேட்டிங் வரிசையாக இருக்கும் என்று கூறினார். இறுதியாக பேட் கம்மின்ஸ் பதிலளிக்கையில், யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பதில் ந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.