கம்மின்ஸ் வீழ்த்திய ஹாட்ரிக்; அப்போ இந்தியாவுக்கு தான் கோப்பை? வரலாறு தெரியுமா!

Bangladesh Cricket Team Australia Cricket Team Pat Cummins T20 World Cup 2024
By Sumathi Jun 21, 2024 07:04 AM GMT
Report

 பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பேட் கம்மின்ஸ்

டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.

australia cricket team

அதில், முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹாட்ரிக் முறையில் வீழ்த்தி அசத்தினார்.

சூப்பர் 8இல் மெகா ட்விஸ்ட் - இந்தியா ஆடும் அனைத்து போட்டிக்கும் ஆப்பு!

சூப்பர் 8இல் மெகா ட்விஸ்ட் - இந்தியா ஆடும் அனைத்து போட்டிக்கும் ஆப்பு!

இந்தியாவுக்கு தான் கோப்பை?

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 4-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 2007-ல் இதே வங்கதேசத்திற்கு எதிராக பிரெட் லீ ஹாட்ரிக் எடுத்திருந்தார்.

t20 world cup 2024

தற்போதும், வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய பௌலர் ஒருவர் ஹாட்ரிக் எடுத்துள்ளார். இதனால், 2007-ல் நடந்தது போல, தற்போதும் இந்திய அணி கோப்பை வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.