பாலியல் அடிமைகளாக பெண்கள் - மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை!
சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
துருக்கியைச் சேர்ந்தவர் அட்னான் அக்தார்(66). இஅவர் ஏ9 என்ற தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற்றார். அதில் சமய வழிபாட்டு முறைகள் குறித்து கருத்துகள் தெரிவித்து வந்தார். இவர் மதபோதகர் எனவும் கூறப்படுகிறது.

இதனால் பல பெண்கள் இவரை பின்பற்றினர். இதனை உபயோகப்படுத்திக் கொண்ட இவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் ஒரு பெண் புகாரளித்துள்ளார். அதில், "நாங்கள் முதலில் சமய வழிபாட்டு முறையை பார்த்து ஈர்க்கப்பட்டோம்.
மதப்போதகர் கொடூரம்
இது வித்தியாசமாக இருந்தது. அவரிடம் சென்ற பின்னர் எங்களது சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டது. இது எல்லாம் ஓரிரு நாட்களில் நடந்துவிடவில்லை. இது நடக்க ஓராண்டுகள் ஆனது. கடைசியாக எங்களுக்கு வேறு வழியே இருக்காது.

நாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவோம். பின்னர் இவர் எங்களுக்கு இவர் கட்டாயப்படுத்தி கருத்தடை மாத்திரைகளை கொடுப்பார்" என்று கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, இஸ்தான்புல் நீதிமன்றம் அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.