தாலி கட்டும் நேரம்; திடீரென தடுத்து நிறுத்தப்பட்ட மாணவி திருமணம் - பின்னணி என்ன?

Cuddalore Marriage
By Sumathi Feb 12, 2024 04:22 AM GMT
Report

கல்லூரி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி திருமணம்

கடலூர், ராமநத்தம் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கும், பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்றுள்ளது. அதன்படி, தொடர்ந்து ராமநத்தத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடக்கவிருந்தது.

தாலி கட்டும் நேரம்; திடீரென தடுத்து நிறுத்தப்பட்ட மாணவி திருமணம் - பின்னணி என்ன? | Cuddalore A College Students Marriage Stopped

இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள் என பலர் மண்டபத்தில் குவிந்திருந்தனர். இந்நிலையில், திருமணம் மண்டபத்திற்கு விரைந்து வந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

42 வயது ஆசிரியர் மீது காதலில் விழுந்த 20வயது மாணவி - குமுறும் 90s!

42 வயது ஆசிரியர் மீது காதலில் விழுந்த 20வயது மாணவி - குமுறும் 90s!

போலீஸார் நடவடிக்கை

கல்லூரி மாணவியின் சான்றிதழ்களை வாங்கி பார்த்தபோது, அந்த மாணவிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 4 மாதங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் மணமகன் மற்றும் மாணவியின் பெற்றோர்களிடம் மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என போலீசார் எழுதி வாங்கிக் கொண்டனர்.

தாலி கட்டும் நேரம்; திடீரென தடுத்து நிறுத்தப்பட்ட மாணவி திருமணம் - பின்னணி என்ன? | Cuddalore A College Students Marriage Stopped

அதனையடுத்து, இருவரையும் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறினர். முன்னதாக, இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.