52 வயதான ஆசிரியரை காதல் திருமணம் செய்த 20 வயது மாணவி..!

Pakistan Marriage
By Nandhini Oct 30, 2022 11:09 AM GMT
Report

52 வயதான ஆசிரியரை பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி காதலித்து திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

52 வயதான ஆசிரியரை திருமணம் செய்த மாணவி

பாகிஸ்தானைச் சேர்ந்த கல்லூரி மாணவி சோயா நூர் (20). சாஜித் அலி என்ற 52 வயதான தனது ஆசிரியரை சோயா நூர் காதலித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, தன் காதலை ஆசிரியரிடம் வெளிப்படுத்தியுள்ளார் சோயா. ஆனால், முதலில் சாஜித் அலி இந்தக் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதன் பின்பு சோயா நூரின் காதலை ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.    

20-year-old-student-married-52-year-old-teacher