பயங்கர தீ விபத்து - 49 செம்மறி ஆடுகள் கருகி பலி!

Cuddalore Death
By Sumathi Feb 17, 2025 05:17 AM GMT
Report

தீ விபத்தில் 49 செம்மறி ஆடுகள் கருகி பலியாகியுள்ளது.

தீ விபத்து

கடலூர், திட்டக்குடி அருகே வாகையூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். தொடர்ந்து வயலில் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.

பயங்கர தீ விபத்து - 49 செம்மறி ஆடுகள் கருகி பலி! | Cuddalore 49 Sheep Burnt Fire Accident

வழக்கம்போல் ஆடுகளை பார்க்க வந்தவர், அதிர்ச்சியில் மிரண்டுள்ளார். ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.

சாராய விற்பனை; தட்டிக்கேட்ட 2 மாணவர்கள் படுகொலை - பரபரப்பு!

சாராய விற்பனை; தட்டிக்கேட்ட 2 மாணவர்கள் படுகொலை - பரபரப்பு!

ஆடுகள் பலி

உடனே இதுகுறித்து புகாரளித்ததில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அருகில் உள்ள இடத்தில் விவசாய கழிவுகளை எரித்த நிலையில் தீ பரவி இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

cuddalore

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.