திருச்சி to பெரம்பலூர்.. பல பெண்களை ஏமாற்றிய கணவர் -முதல் மனைவி செய்த சம்பவம்!
காதலர் தினத்தில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2வதாக திருமணம் செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம் ரங்கநாத புரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் (தினேஷ் வயது24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3வயதில் நவீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
சந்தோசமாக நகர்ந்த குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் மினி பஸ் ஓட்டி வந்த தினேஷுக்கும் பெரம்பலூர் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல் மனைவி சௌந்தர்யாவுக்குத் தெரியாமல் அந்த பெண்ணை தினேஷ் திருமணம் செய்துள்ளார்.
கைது
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சௌந்தர்யா கணவரை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரின் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தினேஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
சௌந்தர்யாவைப் பிரிந்து சென்னையில் வேலை பார்த்த போது பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிப் பழகி வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.