படுக்கையறையில் வீடியோ பார்க்க கூடாது.. காதலர் தினத்தில் வினோத ஒப்பந்தம் - வைரல்!
காதலர் தினத்தில் தம்பதியின் வினோத ஒப்பந்தம் செய்து கொண்டது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இளம் ஜோடி
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காதல் ஜோடிகள் தங்களது அன்பை வெளிப்படுத்த ரோஜாக்கள் மற்றும் சாக்லேட்கள் கொடுத்து சர்ப்பீரைஸ் செய்வர்.அந்த வகையில் இளம் ஜோடியின் ஒப்பந்தம் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் ஷுபம் - அனையா தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு வினோத ஒப்பந்தம் செய்து கொண்டனர்.அதில்,கணவர் ஷுபம் அடிக்கடி சண்டையிடுவதைத் தவிர்க்கவும்,
தங்கள் திருமண வாழ்க்கையில் அன்பை பகிர ஒப்பந்தத்தை உருவாக்க முடிவு செய்தனர்.அதன்படி, சாப்பிடும் போது வேலை பற்றிப் பேசக்கூடாது. படுக்கையறையில் வர்த்தகம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கூடாது .மேலும் தன்னை பியூட்டி காயின், கிரிப்டோ பை என அழைப்பதை நிறுத்த வேண்டும்.
வினோத ஒப்பந்தம்
இரவு 9 மணிக்குப் பிறகு வர்த்தகம் பற்றிப் பேசக்கூடாது இவ்வாறு மனைவி கூறி இருந்தார்.அதே போல் கணவரும் தனது தாயிடம் தன்னை பற்றி புகார் செய்வதை நிறுத்த வேண்டும்.சண்டையின் போது முன்னாள் காதலி பற்றிப் பேசக்கூடாது.இரவு நேரங்களில் ஆப் மூலம் உணவ ஆர்டர் செய்யக் கூடாது எனக் கூறியிருந்தார்.
இந்த ஒப்பந்தங்களை இருவரும் மீறினால் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல், மளிகைப் பொருட்கள் வாங்குதல் போன்ற 3 மாத வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.