ரகசியமாக 2வது திருமணம் செய்துக் கொண்ட சித்தார்த் - தீயாய் பரவும் தகவல்!

Siddharth Aditi Rao Hydari Tamil Cinema Marriage
By Sumathi Mar 27, 2024 11:51 AM GMT
Report

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் - அதிதி 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

siddharth-aditi

மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சித்தா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.

த்ரிஷாவுடன் அந்த சீனா; அப்போ ஜாலி மாமா - மனம் திறந்த சித்தார்த்!

த்ரிஷாவுடன் அந்த சீனா; அப்போ ஜாலி மாமா - மனம் திறந்த சித்தார்த்!

திருமணம்

தொடர்ந்து, நடிகை அதிதியுடன் இணைத்து காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கிக்கொள்வார். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், இன்ஸ்டாகிராமில் இணைந்து பல ரீல்ஸ்களைச் செய்திருந்தனர்.

ரகசியமாக 2வது திருமணம் செய்துக் கொண்ட சித்தார்த் - தீயாய் பரவும் தகவல்! | Ctor Siddharth Aditi Rao Got Married Viral Photos

இந்நிலையில், நடிகர் சித்தார்த்துக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.