இந்த டாப் பிளேயர்களை தக்க வைத்து கொண்ட CSK அணி - யாரெல்லாம் தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்து கொண்ட வீரர்கள் பட்டியல் தயார் செய்யப்படுள்ளது.
CSK அணி
வருகின்ற 2025ம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், சென்னை அணி தக்கவைப்பு பட்டியலை முன்பே தயார் செய்து உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பட்டியல் தொடர்பான தகவலை சமூக ஊடகங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில் ஏலத்திற்கு முன்பு ரசிகர்கள் யாரை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள பதிவில் 5 வீரர்களின் சிறப்பு எமோஜிகள் இடம் பெற்றிருந்தது. அதாவது, ஹெலிகாப்டர், கிவி பழம், ராக்கெட் போன்ற எமோஜிகள் எம்எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரானா போன்ற வீரர்களை குறிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
டாப் பிளேயர்கள்
இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் சீசனில் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளதாக பல்வேறு அறிக்கைகள் கூறுகின்றனர்.
ஐந்து தக்கவைப்புகளை இறுதி செய்துள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த பட்டியலில் எம்எஸ் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, ஸ்ரீலங்கா வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா ஆகியோர் உள்ளனர்.
பட்டியலில் இடம்பெறாத ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே போன்ற நட்சத்திர வீரர்களை சிஎஸ்கே விடுவிக்க உள்ளதாகத் தெரிகிறது. தோனியை அன்-கேப்ட் வீரராகத் தொடர வாய்ப்புள்ளது.
ஐந்து தக்கவைப்புகளுக்கு மொத்தம் ரூ.120 கோடியில் இருந்து குறைந்தது ரூ.65 கோடி செலவாகும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.ஐபிஎல் விதிமுறைகளின்படி, இந்திய கிரிக்கெட் அணி வீரர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய அணிக்காக விளையாடவில்லை என்றால், 'அன்-கேப்ட் வீரர்' என்று கருதப்படுவார்.