பிரபல தொழிலதிபருக்கு சொந்தமாகிறதா CSK? இந்தியா சிமெண்ட்ஸ் 55% பங்குகள் விற்பனை

Chennai Super Kings Tamil nadu Chennai
By Karthick Jul 29, 2024 07:09 AM GMT
Report

இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் தான் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்தியா சிமெண்ட்ஸ்

தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்டு 1946-ஆம் ஆண்டு எஸ்.என்.என்.சங்கரலிங்க அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் இந்தியாவின் 9-வது பெரிய வருவாய் ஈட்டும் நிறுவனமாக உள்ளது.

India cements Srinivasan

தமிழ்நாட்டை தாண்டி, ஆந்திரா - தெலுங்கானா என நாட்டின் 7 இடங்களில் சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ள இந்நிறுவனத்தின் கீழ் சங்கர் சிமெண்ட்ஸ், கோரமண்டல் சிமெண்ட்ஸ், ராசி கோல்ட் போன்ற 3 முக்கிய சிமெண்ட் பிராண்டுகள் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைப்பற்றும் அதானி? ரசிகர்களை அதிரவைத்த செய்தி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைப்பற்றும் அதானி? ரசிகர்களை அதிரவைத்த செய்தி!!

இதன் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஸ்ரீனிவாசன் தான் ஐபிஎல் சென்னை அணியின் உரிமையாளராக இருக்கிறார்.

கைமாறுகிறதா..?

தற்போது ஸ்ரீனிவாசன் கைநழுவி போயுள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்தியா சிமெண்ட்ஸ் 22.77% பங்குகளை கடந்த ஜூன் மாதத்தில் கைப்பற்றியது ஆதித்யா பிர்லா நிறுவனம். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் 2-வது முறையாக மொத்தமாக சுமார் 55 % பங்குகளை வாங்கியுள்ளது ஆதித்யா பிர்லா குழுமம்.

Aditya Birla group

இதன் அடிப்படையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது ஆதித்யா பிர்லா நிறுவனம். இதனை தொடர்ந்து குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்தும் ஸ்ரீனிவாசன் வெளியேறியுள்ளார். இதன் காரணமாக, சென்னை அணியின் உரிமையாளர் பதவியில் இருந்து நீங்கும் சூழலில் உள்ளது இந்தியா சிமெண்ட்ஸ்.

பிரபல தொழிலதிபருக்கு சொந்தமாகிறதா CSK? இந்தியா சிமெண்ட்ஸ் 55% பங்குகள் விற்பனை | India Cements Shares Bought By Aditya Birla Group

அணியை பிர்லா குழுமம் கைப்பற்றுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 30% உரிமத்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் trustees மற்றும் shareholders ஆகியோர் வைத்திருந்தார்கள். இதில், தற்போது எத்தனை ஷேர்கள் கைமாறியுள்ளது என்பது சில காலங்களில் பதில் கிடைத்து விடும்.