முதலில் கான்வே இப்போ இந்த பௌலரும் காயம்..? சிக்கலில் CSK - தல'யின் Plan B என்ன..?

MS Dhoni Chennai Super Kings IPL 2024
By Karthick Mar 11, 2024 02:34 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரும் 22-ஆம் தேதி எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2024

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி துவங்குகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்'யின் வீரர் டேவன் கான்வே காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

csk-player-matheesha-pathirana-has-been-injured

இதுவே சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அணியின் வீரர்கள் பயிற்சியை துவங்கி விட்ட நிலையில், தற்போது மற்றொருமொரு வீரருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

csk-player-matheesha-pathirana-has-been-injured

சென்னை அணியின் முக்கிய பௌலராக கருதப்படும் இலங்கை அணியை சேர்ந்த மதீஷா பதிரானா'வும் காயம் அடைந்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் அவருக்கு இடது கால் தொடை பகுதியில் கிரேட் 1 தொடை காயம் ஏற்பட்டுள்ளது.

வெறுப்பேற்றிய வீரர் - கிட் பேக்கை எட்டி உதைத்த கேப்டன் கூல் - போட்டுடைத்த CSK வீரர்

வெறுப்பேற்றிய வீரர் - கிட் பேக்கை எட்டி உதைத்த கேப்டன் கூல் - போட்டுடைத்த CSK வீரர்

பௌலருக்கும் காயம்..? 

இதனால், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா..? இல்லையா..? என்பது சந்தேகம் எழுந்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு புறம் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில்,மற்றொரு புறம் அடுத்தடுத்த வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சற்று சென்னை அணி ரசிகர்ளுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. 

csk-player-matheesha-pathirana-has-been-injured

இருப்பினும் சமூகவலைத்தளங்களில் எப்போதும் பிளான் B வைத்திருக்கும் சென்னை அணியின் கேப்டன் தோனி, இந்த பிரச்சனைகளை கையாளவும் பிளான் B ஒன்றை நிச்சயம் வைத்திருப்பார் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.