பாக்கியலட்சுமி சீரியல் நடிகையுடன் காதலில் சிஎஸ்கே வீரர் பதிரானா? தீயாய் பரவும் தகவல்
பாக்கியலட்சுமி சீரியல் நடிகையுடன் சிஎஸ்கே வீரர் பதிரானா காதலில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
நேகா
சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் இலங்கை வீரர் பதிராணா. இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இவரது வேகப்பந்து வீச்சால் எதிரணி நெருக்கடியை சந்திக்கும்.
இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பதிராணா மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார். இதில் அவருக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகர்கள் ஏராளம்.
பதிரானாவுடன் காதல்?
அந்த வகையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நேகா என்ற நடிகை நடித்து வருகிறார். இவர் இலங்கை வீரர் பதிரானவை காதலிப்பதாகவும், இருவரும் அடிக்கடி சந்தித்து டேட்டிங் செய்வதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நேகா, தாம் யாரையும் காதலிக்கவில்லை. பதிராணாவுடன் நான் காதலில் இருப்பதாக கூறும் செய்தி பொய்.
இதேபோன்று தமது பெயர் வேறு ஒரு நடிகருடன் சேர்த்து பேசப்படுகிறது. அதிலும் உண்மை இல்லை என்று விளக்கமளித்துள்ளார். இந்த தகவல் தற்போது ஐபிஎல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வைரலாகி வருகிறது.