ஏலத்திற்கு வரும் ஸ்டார் விக்கெட் கீப்பர்..அப்போ தோனிக்கு பதில் இவரா? சிஎஸ்கே முடிவு!
புதிய ஐபிஎல் விதிமுறை காரணமாக ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
ஏலம்
வருகின்ற ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலம், நவம்பர் இறுதியில் துவங்கி நடைபெறவுள்ளது. ஐபிஎல் 18ஆவது சீசனுக்கு முன், ஒரு அணி 6 வீரர்களை தக்கவைக்க முடியும். அதில் ஒரு வீரர், அன்கேப்ட் வீரராக இருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அந்த 6 வீரர்களில், யார் எத்தனை கோடிக்கு தக்கவைக்க வேண்டும் என்பது குறித்து விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு வீரருக்கு 18 கோடி கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது, ஒரு அணியில் 18 கோடி மதிப்பில் 2 வீரர்களையும்,
14 கோடி மதிப்பில் இரண்டு வீரர்களையும், 11 கோடி மதிப்பில் ஒரு வீரரையும், 4 கோடி மதிப்பில் அன்கேப்ட் வீரரையும் தக்கவைக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டது. இப்படி, 6 வீரர்களை தக்கவைக்க மட்டும், 75 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளனர்.
சிஎஸ்கே
இந்த நிலையில், இந்த 75 கோடி ரூபாயை, இனி விதிமுறைப்படி செலவு செய்யத் தேவையில்லை. 75 கோடி மதிப்பில் 6 வீரர்களில் யாரை வேண்டுமானாலும் தக்கவைக்கலாம் என பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஒரு வீரருக்கு, தாரளமாக 30 கோடி கூட கொடுக்கலாம்.
மற்ற வீரர்களுக்கு மாத தொகையை பகிர்ந்து கொடுக்கலாம் எனப்படுகிறது. இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கும் குறைந்த தொகையும், மற்ற வீரர்களுக்கு அதிக தொகையும் கொடுக்க முடியும்.
இதனால், இந்த தொகையை வாங்க மறுத்து ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்றவர்கள் ஏலத்தில் பங்கேற்கவும் அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் ,ரிஷப் பந்த் ஏலத்திற்கு வந்தால்,
அவரை பெரிய தொகை கொடுத்து வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருப்பதாகவும், 20 கோடி வரை கொடுத்து வாங்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.