இன்னைக்கு ஜெயிக்க இத செஞ்சே ஆகணும் - சென்னை அணியின் பெரிய சிக்கல்?
சென்னை அணி Play off செல்ல இன்று நடைபெறும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயமாக வென்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இது வரி 12 போட்டிகளில் விளையாடி அதில் 6'இல் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிபட்டியலில் Net RunRate அடிப்படையில் 4-வது இடத்தில் சென்னை அணி நீடிக்கிறது.
இருப்பினும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் டெல்லி, லக்னோ அணிகளும் இதே 6 வெற்றியை தான் 12 போட்டிகளில் பெற்றுள்ளது. அது தான் சென்னை அணிக்கு பெரும் நெருக்கடியான நிலையை உண்டாகியுள்ளது.
பலமான ராஜஸ்தான் அணியை இன்று சென்னை சேப்பாக்கத்தில் மதியம் எதிர்கொள்கிறது சென்னை அணி. இதில் வெற்றி பெறுவது சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆனால், அது பெரும் சவாலான விஷயமாக உள்ளது. சென்னை அணியின் பந்துவீச்சு கடந்த போட்டியில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. முக்கிய வீரர்களான முஸ்தபிசுர் ரகுமான், பதிரனா ஆகியோர் இல்லாதது தான் பெரும் சிக்கல். மேலும் தீபக் சஹர் சுத்தமாக ஃபார்ம் அவுட். அதே நேரத்தில், பேட்டிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
ரஹானே
கடந்த ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை நோக்கி விளையாடிய நிலையில், ஓப்பனராக ரஹானே உள்ளே வந்தது பலருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. ரஹானே சிறப்பான வீரர் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அவரின் ஃபார்ம் இந்த ஆண்டு கேள்விகுறையானதாக உள்ளது.
ஓப்பனர் ருதுராஜ், மிடில் ஆர்டரில் வரும் டேரி மிச்சேல், மெய்ன் அலி, சிவம் துபே, ஜடேஜா, கடைசியாக வரும் தோனி என அனைவரும் எதோ ஒரு போட்டியில் அணிக்காக கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர்.
ஆனால், ரஹானே இன்னும் திணறுகிறார். அதன் காரணமாக, அவருக்கு பதிலாக இளம் ஒப்பனரான ரச்சின் ரவீந்திரா இந்த போட்டியில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், இறுதி முடிவு சென்னை அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கையில் தான். பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் சென்னை அணியின் Play off நீடிக்குமா? நீர்த்து போகுமா? என்பதை