தோனி இருந்தாலும்..இல்லனாலும்; சி.எஸ்.கேவின் விக்கெட் கீப்பர் அவர்தான் - யார் தெரியுமா?

MS Dhoni Chennai Super Kings TATA IPL
By Swetha Sep 12, 2024 07:32 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோனிக்கு சரியான மாற்றுவீரரை தேர்வு செய்ய தயாராகி வருகிறது.

சி.எஸ்.கே

ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்த ஏற்பாடுகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தோனி இருந்தாலும்..இல்லனாலும்; சி.எஸ்.கேவின் விக்கெட் கீப்பர் அவர்தான் - யார் தெரியுமா? | Csk Is To Replace Dhoni With Rajasthan Player

அதாவது இந்த ஆண்டு இறுதியில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது நடைபெற உள்ளது. இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோனிக்கு சரியான மாற்றுவீரரை தேர்வு செய்ய தயாராகி வருகிறது என கூறப்படுகிறது.

எனது ஆன்மா சேப்பாக்கத்தில் தான்.. தோனி தான் சப்போர்ட் பண்ணாரு - அஷ்வின் உருக்கம்!

எனது ஆன்மா சேப்பாக்கத்தில் தான்.. தோனி தான் சப்போர்ட் பண்ணாரு - அஷ்வின் உருக்கம்!

யார் தெரியுமா?

ஏனெனில் 43 வயதாகும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருவார் என தெரியாது எனவேதான் இந்த முடிவு என சொல்லப்படுகிறது. அந்த வகையில் தோனிக்கு மாற்றுவீரராக துருவ் ஜுரேலை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முனைப்பு காட்டும் என்று தெரிகிறது.

தோனி இருந்தாலும்..இல்லனாலும்; சி.எஸ்.கேவின் விக்கெட் கீப்பர் அவர்தான் - யார் தெரியுமா? | Csk Is To Replace Dhoni With Rajasthan Player

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பின் வரிசையில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட கூடியவர்.இப்படி விக்கெட் கீப்பிங் மற்றும் தோனியை போன்று பினிஷராக களமிறங்கும் அவரை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.