எனது ஆன்மா சேப்பாக்கத்தில் தான்.. தோனி தான் சப்போர்ட் பண்ணாரு - அஷ்வின் உருக்கம்!

Jiyath
in கிரிக்கெட்Report this article
500 விக்கெட் வீழ்த்தியதை கவுரவிக்கும் வகையில் ரவிச்சந்தின் அஷ்வினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பாராட்டு விழா
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதனை கவுரவிக்கும் வகையில் அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மேலும், அஷ்வினுக்கு நினைவுப் பரிசோடு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.1 கோடி வெகுமதியாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின் "மகேந்திர சிங் தோனி எனக்குக் கொடுத்த வாய்ப்புகளுக்காக வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன்.
அஷ்வின் உருக்கம்
அவர்தான் கெய்லுக்கு முதல் ஓவரை என்னை வீச வைத்தார். அந்தளவுக்கு முக்கியமான தருணம் அது. 2013-ல் ஒரு தொடரின் போது என்னை அணியிலிருந்து ட்ராப் செய்யும் முடிவில் இருந்தார்கள். தோனி தான் 'அவர் கடந்த சீரிஸில் சிறப்பாக ஆடியிருக்கிறார் எனக் கூறி எனக்காக சப்போர்ட் செய்து அணியில் எடுத்தார்.
நாளை நான் உயிரோடு இல்லையென்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டேதான் இருக்கும். அந்தளவுக்கு இந்த இடம் எனக்கு முக்கியமானது. எனது கரியரில் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி" என்று உருக்கமாக பேசினார்.