ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்.! எதற்காக?
இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் அணிகள் மோதின. இந்த முறை அனைத்து அணிகளும் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடாமல் வெளியூர்களில் விளையாடுகின்றன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதின.

முதலில் விளையாடிய சென்னை அணி 188 ரன்கள் ஸ்கோர் செய்தது. 189 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி 18.4 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் தோனிக்கு 12 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணி பந்து வீசும்போது தாமதமாக பந்து வீசியதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil
அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில் IBC Tamil