தோனி ஓய்வு பெருகிறாரா?முட்டாளாக்கி ..கடுப்பான சென்னை பௌலிங் கோச்!!
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது தான் பலரின் கவனம் தற்போது உள்ளது.
தோனி
சென்னை அணிக்கு 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனான தோனி, தனது கிரிக்கெட் வாழ்வில் இறுதிக்கட்டத்தில் உள்ளார். 42 வயதை அடைந்ததுள்ள அவர், அடுத்த ஆண்டு சென்னை அணிக்கு விளையாடவந்தால் அப்போது அவரின் வயது 43 ஆகும்.
உடல் ரிதியாக பல பிரச்னைகளை சந்தித்து வரும் அவருக்கு அது பெரும் சவாலான ஒன்றாக அமைந்திருக்கும்.
இந்த ஆண்டுடன் தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என கூறப்படும் நிலையில், இது குறித்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் பதிலளித்துள்ளார்.
முட்டாளாக்கி
அவர் பேசும் போது,“அவரின் எதிர்காலத்தைக் குறித்து ஊகிக்க நினைக்கும் எவரையும் முட்டாளாக்கி விடுவார் தோனி என கூறி, அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்றும் தெரிவித்தார்.
போட்டிக்கு முந்தைய practise செஷனில் அவர் பந்தை அடிப்பதை தான் கவனித்திருப்பதாக கூறி, அவர் நன்றாக தான் விளையாடுகிறார் என கூறி, கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலின் அடிப்படையில் தோனியிடம் ஒரு தனித்துவம் இருப்பதாக கூறினார்.