நாங்க கூடுறதே அழுறதுக்காகத்தான்; டிரெண்டாகும் CRYING CLUBகள் - என்ன கதை!
கூடி அழுவதற்கென்றே CRYING CLUB-கள் உருவாகிவருகின்றன.
CRYING CLUB
மும்பையில் அழுவதற்கென்றே CRYING CLUB-கள் உருவாகிவருகின்றன. இந்த கிளப்புக்கு, ‘தி க்ரையிங்க் கிளப்’ என பெயரிட்டுள்ளனர். அழுது தங்களோட கவலைகளைப் போக்க நினைக்கின்றவர்களை அழைக்கின்றனர்.
மேலும் ஒரு தடவை வந்து பாருங்க எப்படிக் கதற கதற அழவைக்கிறோம்னு எனத் தெரிவிக்கின்றனர். இதற்காக அங்கு செல்பவர்களுக்கு டிஷ்யூ பேப்பர், டீ கொடுத்து உற்சாகப்படுத்துகின்றனர்.
பின்னணி என்ன?
இவ்வாறு செய்வதற்கான காரணம் கேட்டால், வாய்விட்டு அழுதா மனபாரம் குறையும், ஸ்ட்ரஸ் போய்டும், நிம்மதியான தூக்கம் வரும் என கூறுகின்றனர்.
இது ஜப்பானில் நடைமுறையில இருக்கிற Ruikatsu என்ற உணர்வு சிகிச்சையின் பின்புலம் என அறியப்படுகிறது. முன்னதாக பெருநகரங்களில் HOMOUR CLUB எனும் சிரிப்பு மன்றங்களைப் போல, தற்போது உருவாகி வரும் CRYING CLUB-கள் கவனம் பெற்று வருகின்றன.