பிரபல நடிகையின் ரிசார்ட்டில் காதலர்களுக்கு நடந்த கொடுமை - சென்னையில் பரபரப்பு!

Sandhya Chennai
By Vinothini May 21, 2023 07:26 AM GMT
Report

 தமிழ் சினிமா நடிகையின் கணவர் நடத்தி வரும் கடலோர ரிசார்ட்டில் தங்கிய காதலர்களுக்கு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலோர ரிசார்ட்

பிரபல தமிழ் சினிமாவின் காதல் பட நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசன்.

cruelty-happened-to-lovers-stayed-in-beach-resort

இவர் கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்துள்ள பரமன்கேனியில் பண்ணை வீடு நடத்தி வருபவர். இது கடற்கரை ஓரம், நீச்சல் குளத்துடன் கூடிய வசதி கொண்டுள்ளதால் காதலர்கள் முதல் குடும்பஸ்தர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு தளமாக இருந்துள்ளது.

இங்கு சென்னையை சேர்ந்த 25 வயதான இளைஞர், தனது காதலி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, இந்த பண்ணை வீட்டில் 3 அறைகள் எடுத்து தங்கியுள்ளார்.

அங்கு, தனது காதலியுடன் இளைஞர் தனியாக அறை எடுத்துகொண்டனர். அந்த அறையை பராமரிக்கும் பணியை சுபாஷ் என்பருக்கு அளித்தனர்.

நிகழ்ந்த கொடுமை

இந்நிலையில், பகலில் காதலி மற்றும் நண்பர்களுடன் கூத்தடித்து விட்டு டையர்டாக இருந்த இளைஞர், இரவில் தனது காதலியுடன் அறையில் தூங்கியுள்ளார்.

cruelty-happened-to-lovers-stayed-in-beach-resort

இவர் தங்கியிருந்த அறை உள்பக்கம் தாழிட்டு கொண்டாலும், வெளிப்பக்கம் எளிதாக திறக்கும் தாழ்பாளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ரூம் பாய் இரவில், அவர்கள் உறங்கி கொண்டிருக்கும்போது நைசாக திறந்து உள்ளேய சென்று இருவருக்கும் இடையில் படுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் அந்த பெண்ணை அவரது காதலன் போல நெருங்கியுள்ளார். இதனால் வித்யாசமாக உணர்ந்த அந்த பெண் லைட் ஆன் செய்து பார்த்து கூச்சலிட்டுள்ளார்.

உடனே, காதலனும் அவரது நண்பர்களும் இவரை தாக்கியுள்ளனர், இதனை போலீசாருக்கு தங்கள் அனுப்பப்பட்டு அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.