என்ன சென்னையில் மீண்டும் காக்கா பிரியாணியா? மக்களே உஷார்!
பிரியாணியில் காகத்தின் இறைச்சி கலக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
காக்கா பிரியாணி
சென்னையில் பிரியாணி கடைகளும் அசைவ உணவகங்களும் அதிகரித்து வருகின்றது. உணவு பிரியர்கள் மத்தியில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது.
கோழி ஆடு மாடு இறைச்சிகளில் பிரியாணி போடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை கடைகள் மற்றும் உணவகங்களில் நாய் பூனைகளின் இறைச்சி கலக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பிரியாணியில் காகத்தின் இறைச்சி கலக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருவள்ளூர், திருப்பாக்கம் கிராமத்தில் காக்கைகளை கொன்ற தம்பதியினரை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
தீவிர விசாரணை
அவர்களிடம் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 19 காகைகள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் அடங்கிய ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் உணவு தேவைக்காக காக்கங்களை கொன்றதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், நெடுஞ்சாலைகளில் செயல்படும் சிறிய பிரியாணி விற்பனை நிலையங்களுக்காக காகங்களை கொண்டு அவற்றின் இறைச்சியை வழங்குவதற்காக காக்கைகள் வேட்டையாடப்பட்டிருக்கலால் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பிரியாணி உண்பவர்கள் சற்று கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.