ஒரே நாளில் கர்ணன் திரைப்படம் இத்தனைக் கோடி வசூலா?

vijay flim dhanush karnan
By Jon Apr 11, 2021 01:09 PM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வெளியான முதல் நாளில் 24 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க, பண்டராத்தி புராணம் உள்ளிட்ட பாடல்கள் படம் வருவதற்கு முன்பே மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றன.

இப்படத்தில் மலையான நடிகையான ரஜிஷா தமிழில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சிறப்பாக காட்சிப்படுத்திய மாரி செல்வராஜின் முயற்சிக்கு நடிகரி விஜய்சேதுபதி, அர்ச்சனா கல்பாத்தி, பி.சி. ஸ்ரீராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தன. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ஒரே நாளில் ரூ.24 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.