பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு
கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி அளிப்பதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் கடன்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார் முதல்வர் விஜய்.
இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதியில் ரூ.50 ஆயிரம் பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது.
இதில் ஜுன் 15ல் நடைபெற்ற மறுஆய்வு கூட்டத்தில் விவசாய கடன் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடுத்த முடிவு
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்கடன் தள்ளுபடிக்கான முழுதொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 6000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது குறைந்த பட்சமாக 35 ஆயிரம் ரூபாயும், அதிக பட்சமாக ரூ.75 ஆயிரம் பணப்பயன் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த முடிவினால் பயிர்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்பது கூறப்படுகின்றது.