தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்
தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் ரூ1.28 லட்சம்
இதில் பேசிய அவர், "60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனை விட, கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது. 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சத்தில் கோடியில் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ13.18 லட்சம் கோடியாக உள்ளது.

மாநில ஜிடிபி 28.7% ல் இருந்து 28.3% ஆக குறைந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று காலத்தை விட திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உள்ளது.
அன்றாட செலவுகளுக்கே அரசு கடன் வாங்குகிறது. தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் 22.8 சதவீதம் வட்டிக்காகவே செலவாகி வருகிறது. வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.67,000 கோடி செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில 2020-21 ஆம் ஆண்டில் ரூ.67,087 ஆக இருந்த தனிநபர் மீதான கடன், 2025-26 ஆண்டில் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒரு குழந்தை, இணை மாநிலங்களை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்துள்ளது, வட்டி செலுத்துதல், பொறுப்பற்ற செலவினம், மூலதன ஆகிய 4 காரணிகளும் கடன் அதிகரிக்க காரணமாக உள்ளது.
தமிழ்நாடு மின்சார துறைக்கே அதிக கடன் உள்ளது. தமிழ்நாடு மின்வாரிய குழுமத்திற்கு (TNEB) கடன் ரூ.2,47,130 கோடியும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) கடன் ரூ.1,07,305 கோடியும், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TANGEDCO) கடன் ரூ.1,03,128 கோடியும், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) கடன் ரூ.5,072 கோடியும் உள்ளது.
மாநில போக்குவரத்து கழகத்திற்கு ரூ.43,865 கோடி கடன் உள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.78.81 செலவாகிறது. ஆனால் வருவாய் ரூ.25 மட்டுமே கிடைக்கிறது.
முதியோரின் விகிதம் மிக அதிகமாக அதிகரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது முதியோரின் பங்கு 10.6 சதவீதத்திலிருந்து (2011) 2030ஆம் ஆண்டிற்குள் 18.2 சதவீதமாக உயரும்." என தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையின் ஊழியர்களை வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
அமெரிக்காவின் பாரிய பி52 குண்டுவீச்சு விமானம் விழுந்து விபத்து : உயிரிழப்பு தொடர்பில் வெளியான தகவல் IBC Tamil