விவசாய கடன் தள்ளுபடியில் ஏமாற்றிய த.வெ.க அரசு.... உதயநிதியின் ஆவேச பதிவு
முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பு பயிர்கடன் குறித்து கொடுத்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ள நிலையில் இதற்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பேசி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி
தவெக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார்.
அவர் ஆட்சிக்கு வந்து 15 நாட்கள் தாண்டியும் எதுவும் நடக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துவருகின்றார்.
இந்நிலையில் நேற்றைய தினம் விவசாய கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யாமல் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்வதாக அதற்கான வரைமுறையையும் வைத்துள்ளார்.

உதயநிதியின் அதிரடி பதிவு
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தளங்களில் ஆவேசமாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.

ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar? என்று பதிவிட்டுள்ளார்.
உதயநிதியின் இந்த ஆவேச பதிவினை அவதானித்த மக்கள், விஜய்க்கு வாக்களித்த பலரது நம்பிக்கை கேள்விக்குறியாவதாக நினைத்து வருகின்றனர்.