அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த ஆதவ் அர்ஜுனா
ஊழல் பின்னணி இல்லாமல் இருக்கும் அதிமுக தொண்டர்கள் யாராக இருந்தாலும் தவெக-வில் இணையலாம் என அழைப்பு விடுத்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது, எடப்பாடி பழனிசாமி அணி ஒருபுறம், சிவி சண்முகம்- எஸ் பி வேலுமணி அணியினர் மற்றொரு புறம் பிரிந்து நிற்கின்றனர்.
சட்டப்பேரவையில் ஆதரவு வாக்கெடுப்பு நடந்த போதும் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இவர்களில் அமைச்சரவையில் இடம்கிடைக்கும் என எதிர்பார்த்த போதும் அது நடக்காமல் போனது.
இந்நிலையில் நேற்று 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததுடன் தவெகவில் இணைந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா அளித்துள்ள பேட்டியில், எம்ஜிஆர் ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த எதிர்கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க நினைத்தார் எடப்பாடி பழனிசாமி.
இது அதிமுகவினருக்கு மனவலியை கொடுத்தது, தவெகவில் அதிமுகவை பார்க்கிறோம், முன்னாள் இந்நாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவெக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அன்புடனும், நம்பிக்கையுடனும் அதிமுக தொண்டர்களை வரவேற்கிறோம், நிர்வாகிகளை வரவேற்கிறோம், ஊழல் பின்னணி இல்லாமல் இருந்தால் நிச்சயம் தவெக-வில் இணையலாம் என தெரிவித்துள்ளார்.