திடீரென சாலையில் நுழைந்த 8 அடி நீள முதலை - அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் ; வைரல் வீடியோ
சாலையில் சர்வசாதாரணமாக முதலை ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சிப்லுன் சாலையில் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று சாதாரணமாக ஊர்ந்து வந்தது. திடீரென சாலையில் பெரிய முதலையை கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவன் நதி
வாகனத்தில் இருந்த ஒருவர் முதலை சாலையில் நடமாடுவதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் நேற்று இரவு பெய்த கனமழைக்கு பிறகு சாலையோரத்தில் ஒரு பெரிய குட்டி முதலை பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறேன். Pune pic.twitter.com/gknllzPXqe
— suresh elangovan (@sureshelangov12) July 1, 2024
அந்த நகரின் வழியாக செல்லும் சிவன் நதியானது பல முதலைகளின் இருப்பிடமாக உள்ளது. மழை காரணமாக ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், இந்த முதலை அங்கிருந்து வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..