பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் - போக்சோ சட்டத்தின் கீழ் கைது...!

Tamil nadu Crime
By Nandhini 1 மாதம் முன்

பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

குளிப்பதை வீடியோ எடுத்த நபர்

வேளச்சேரி, சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் விஜய் (21). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு பெண் குளிக்கும்போது யாருக்கும் தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து, அந்த வீடியோவை அப்பெண்ணின் அண்ணன் செல்போனுக்கு அனுப்பி இருக்கிறார்.

இதன் பின் விஜய், அப்பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து இந்த வீடியோ என் செல்போனுக்கு யாரோ அனுப்பியதாகவும், அதை திருப்பி உங்களுக்கு அனுப்பியதாக கூறியிருக்கிறார்.

arrest

சிறையில் அடைத்த போலீசார்

இவரின் பேச்சில் சந்தேகமடைந்த அப்பெண்ணின் அண்ணன் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜய்யை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, முதற்கட்ட விசாரணையில் விஜய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு விஜய்யை போலீசார் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.