பேட்டிங்..பவுலிங் செய்யாமல்.. மேன் ஆஃப் தி மேட்ச் வென்ற வீரர்- அது எப்படி சாத்தியம்?
பேட்டிங் அல்லது பவுலிங் செய்யாமல் மேன் ஆஃப் தி மேட்ச் வென்ற வீரரை பற்றி பார்க்கலாம்.
மேன் ஆஃப் தி மேட்ச்
கிரிக்கெட் போட்டிகள் பொறுத்தவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். ஆனால், இங்கே ஒருவர் பேட்டிங்கும் பிடிக்காமல் பவுலிங்கும் போடாமல் மேன் ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றுள்ளார்.
அதாவது, கடந்த 1986ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. கஸ் லோகி ஒரு மேட்ஸ்மேன் என்பதால் அவர் பவுலிங் எதுவும் போடவில்லை.
அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 33.2 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேட்டிங்கிலும் கூட அவர் 2 டவுனில் தான் ஆடுவார்.
வென்ற வீரர்
ஆனால், ஒரு விக்கெட்டை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்ததால் அவர் பேட்டிங்கும் பிடிக்கவில்லை. பவுலிங் போடவில்லை ஆனால் மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றதுக்கு காரணம் ஃபீல்டிங்.
அந்த ஒருநாள் போட்டியில் அவர் மூன்று கேட்சுகள் மற்றும் இரண்டு ரன் அவுட்களை நிகழ்த்தினார். பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கல் என டாப் 8 பேரில் 5 பேர் அவுட் ஆக காரணமாக இவர் அமைந்தார்.
அதேபோல பாகிஸ்தான் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இவரது ஃபீல்டிங்கும் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. எனவே இவரது பீல்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது தரப்பட்டுள்ளது. மேலும், வெறும் ஃபீல்டிங்கிற்காக மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் கஸ் லோகி பெற்றார்