ஐபிஎல் 2025.. ஆர்.சி.பியின் கேப்டனாகிறார் விராட் கோலி - டி வில்லியர்ஸ் உறுதி?

Virat Kohli Royal Challengers Bangalore TATA IPL AB de Villiers
By Swetha Nov 29, 2024 01:30 PM GMT
Report

ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட வாய்ப்பு உள்ளதாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

வருகின்ற 2025ம் ஆண்டின் ஐபிஎல் தொடர் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 18வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. அதில் பெங்களூர் அணி 6 வீரர்களை எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஏலத்தில் பெங்களூர் அணியின் ஏல யுக்தி சர்ச்சையாக வெடித்தது.

ஐபிஎல் 2025.. ஆர்.சி.பியின் கேப்டனாகிறார் விராட் கோலி - டி வில்லியர்ஸ் உறுதி? | Virat Kohli Will Be Captain In Ipl 2025 Devilliers

பெங்களூர் அணி நிர்வாகம் இந்தாண்டு மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. விராட் கோலி 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டிருந்த நிலையில், ரஜத் படிதார் ரூ.11 கோடிக்கும், யாஷ் தயாள் ரூ 5 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தன. இதனையடுத்து நடைபெற்ற மெகா ஏலத்தில் 19 வீரர்களை வாங்கியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணியில் மொத்தம் 22 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், வருகின்ற ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, அது உறுதி செய்யப்பட்டது என்று நான் நினைக்கவில்லை.

முக்கிய வீரர்களை எல்லாம் ஏலத்தில் கோட்டைவிட்ட ஆர்சிபி - கொதித்த ஜாம்பவான்!

முக்கிய வீரர்களை எல்லாம் ஏலத்தில் கோட்டைவிட்ட ஆர்சிபி - கொதித்த ஜாம்பவான்!

டி வில்லியர்ஸ்

ஆனால் தற்போதைய அணியை பார்க்கும் போது விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நமது அணியில் புவனேஸ்வர் குமார், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அதே சமயம் ரபாடா, லுங்கி நிகிடி ஆகியோரை நாம் தவற விட்டு விட்டோம்.

ஐபிஎல் 2025.. ஆர்.சி.பியின் கேப்டனாகிறார் விராட் கோலி - டி வில்லியர்ஸ் உறுதி? | Virat Kohli Will Be Captain In Ipl 2025 Devilliers

நல்ல பார்மில் பிட்டாக இருக்கும் நிகிடி ஸ்லோயர் பந்துகளை சிறப்பாக வீசக்கூடியவர். நியாயமாக சொல்ல வேண்டுமெனில் ஆர்.சி.பி அணி இம்முறை ஓரளவு நல்ல சமநிலையை கொண்டுள்ளது. இருப்பினும் நமது அணியில் மேட்ச் வின்னிங் ஸ்பின்னர் இல்லை.

அதையும் தாண்டி சின்னசாமி மைதானத்தை கோட்டையாக்கும் அளவுக்கு நம்மிடம் சமநிலையுடன் கூடிய அணி இருக்கிறது. இந்த அணி சின்னசாமி மைதானத்தில் வேலை செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் நம்முடைய அணியில் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்,

மணிகட்டு ஸ்பின்னர் கொண்டு வந்தால்வந்தால் நன்றாக இருக்கும். அதற்கு தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீரர்களை மாற்றி வாங்கிக் கொள்ளும் நடைமுறையை பி.சி.சி.ஐ கொண்டு வர விரும்புகிறேன். அதில் விலை போகாத வீரர்களில் ஒரு நல்ல வீரரை கூட நாம் வாங்கலாம். என்று தெரிவித்துள்ளார்.