திரிணாமுல் காங். வேட்பாளர் பட்டியல் - அரசியலில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்!

Cricket Indian Cricket Team West Bengal Mamata Banerjee Sports
By Jiyath Mar 10, 2024 10:15 AM GMT
Report

மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள 42 வேட்பாளர்களின் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ்

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திரிணாமுல் காங். வேட்பாளர் பட்டியல் - அரசியலில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்! | Cricketer Yusuf Pathan Making Mark In Politics

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள 42 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் இடம் பெற்றுள்ளார்.

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா!

யூசுப் பதான்

அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் விளையாடியுள்ளார்.

திரிணாமுல் காங். வேட்பாளர் பட்டியல் - அரசியலில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்! | Cricketer Yusuf Pathan Making Mark In Politics

இந்த அணி ஐபிஎல்-ல் 2 முறை கோப்பையை வென்றிருக்கிறது. அப்போது மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து யூசுப் பதான் வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கிறார்.