3 மாநில பாஜக வெற்றி - காங்கிரஸ் விமர்சித்த மம்தா பானர்ஜீ !!

Rahul Gandhi Mamata Banerjee
By Karthick Dec 04, 2023 10:11 AM GMT
Report

பாஜகவின் 3 மாநில தேர்தல் வெற்றி இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள்

வடஇந்தியாவில் பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

இது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என பார்க்கப்படும் நிலையில், பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பெரும் சக்தியாக வரும் 2024-ஆம் ஆண்டின் தேர்தலில் உருவெடுக்கும் என நம்பப்படும் இந்தியா கூட்டணிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

congress-is-the-reason-for-defeat-mamta-slams

ஏனெனில், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தான் தலைமை பொறுப்பிற்கு வரும் பேசப்பட்ட நிலையில், அந்த கட்சி நேரடியாக ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது.

[JYXTMTR[

ஏற்கனவே, இந்தியா கூட்டணியை உருவாக்க முன்னின்ற பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார், பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மீ நிர்வாகிகள் சிலர் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவே, கூட்டணியில் சலசலப்புகள் இருப்பதாக பல பேச்சுக்கள் எழ துவங்கின.

இந்நிலையில், தான் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜீ காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத்தில் இது குறித்து உரையாற்றிய அவர், காங்கிரஸ் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ராஜஸ்தானிலும் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால், இந்தியா கூட்டணிக் கட்சிகளால் சில வாக்குகள் பிரிந்துவிட்டன என்று சுட்டிக்காட்டி, இதுதான் உண்மை என்றார்.

congress-is-the-reason-for-defeat-mamta-slams

நாங்கள் தொகுதிப் பங்கீடு ஏற்பாட்டைச் சொன்னோம் என்றும் வாக்குகள் பிரிந்ததால் தான் அவர்கள் தோற்றார்கள்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ,மேலும், சித்தாந்தத்துடன், ஒரு வியூகத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் தொகுதிப் பங்கீடு சரியாக இருந்தால், 2024 இல் பாஜக ஆட்சிக்கு வராது என்றும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.