மிசோரம் அரசியலை திருப்பிப்போட்ட ஜிரோம் மக்கள் இயக்கம்..!!தனிபெருபான்மையுடன் ஆட்சி !!

India Election
By Karthick Dec 04, 2023 08:05 AM GMT
Report

தனிப்பெரும் மெஜாரிட்டி வாங்கிய ஜோரம் மக்கள் இயக்கத்தை குறித்து தற்போது காணலாம்.

மிசோரம்

நவம்பர் மாதம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. நேற்று வெளியான முடிவுகளில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது.

mizoram-election-results

தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. இன்று மிசோரம் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறிய மாநிலமான மிசோரத்தில் மொத்தம் 40 தொகுதிகளே.

அங்கு மெஜாரிட்டிக்கு 21 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோரம் மக்கள் இயக்கம், மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் போட்டியிட்டன.

mizoram-election-results

இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடைபெற்று வரும் நிலையில், கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்து ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) 18 இடங்களில் வெற்றியும் மொத்தமாக 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஜோரம் மக்கள் இயக்கம்

கடந்த முறை ஆட்சி செய்த மிசோ தேசிய முன்னணி 6 இடங்களில் வெற்றியும் மொத்தமாக 10 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. மேலும் தேசிய கட்சிகளான பாஜக 2 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றியை வெற்றியை பதிவு செய்துள்ளன.

mizoram-election-results

2018-ஆம் ஆண்டு 6 பிராந்திய கட்சிகளை ஒன்றிணைந்து உருவானது தான் ஜோரம் மக்கள் இயக்கம். முன்னாள் IPS அதிகாரியான லால்துஹோமம்(Lalduhoma) காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக 1984 முதல் 1989 வரை இருந்துள்ளார். அதனை பின்னர், கட்சியில் இருந்து விலகி ஜோரம் மக்கள் இயக்கத்தை உருவாக்கிய லால்துஹோமம் 2018-இல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

தற்போது மிசோரம் மாநிலத்தில் பெரும் மாற்றமாக பார்க்கப்படும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடித்துள்ளதை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடத்துவங்கியுள்ளனர்.