முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா கைதாகிறாரா? - தேடி வரும் காவல்துறை
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராபின் உத்தப்பா
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா 2006 முதல் இந்திய அணிக்காக ஆடி வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக ஆடி வந்துள்ளார்.
பி.எஃப் பணம்
தற்போது ராபின் உத்தப்பா, செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை ன் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.23 லட்சம் பி.எஃப் பணத்தை பி.எஃப் கணக்கில் செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, டிசம்பர் 4 ஆம் தேதி ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27 ஆம் தேதிக்குள் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ராபின் உத்தப்பா தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார். ரூ.23 லட்சம் பணத்தை அவர் செலுத்தி விட்டால் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடுவார் என கூறப்படுகிறது.