கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி - ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் என்ன?

Indian Cricket Team Sports T20 World Cup 2024 Women
By Vidhya Senthil Oct 15, 2024 01:24 PM GMT
Report

   மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மகளிர்  டி20 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் இங்கிலாந்து,

indian team

தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய அணிகள் மற்றொரு பிரிவிலும் களமிறங்கி விளையாடி வருகின்றன. அதன்படி,இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி, இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ரசிகர்களை அலறவிட்ட தல தோனியின் புதிய லுக் - இணையத்தில் வைரல் !

ரசிகர்களை அலறவிட்ட தல தோனியின் புதிய லுக் - இணையத்தில் வைரல் !

அதே போல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.மேலும்,பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றால் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது.

இந்திய அணி

இந்த நிலையில் துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து குரூப்பில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

womens-t20

அப்போது முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 110 ரன்கள் எடுத்தது இரண்டாவது பேட் செய்த பாகிஸ்தான் 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து.இதனால் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.மேலும் உலகக் கோப்பை தொடரில் 4 புள்ளிகளை மட்டுமே பெற்ற இந்திய அணி, தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.