மகள் பிறந்ததால் அதிர்ஷ்டம்: கோஹ்லிக்கு குவியும் வருமானம்?
சமீபத்தில் கோஹ்லி பெண் குழந்தை பிறந்துள்ளதால் விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக உள்ளார்.
தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான கோஹ்லி, விளம்பரங்கள் மூலமும் அதிகம் சம்பாதித்து வருகிறார். இதுதவிர இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவர் தனது வருவாயை பெருக்கிக் கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கோஹ்லி- அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன.
குழந்தைகளுக்குரிய பேம்பர்ஸ், ஷூ மற்றும் குளிர்பான நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil