இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சாதனை
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அதிவேகத்தில் டெஸ்டில் 27 செஞ்சுரி அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அதிவேகத்தில் டெஸ்டில் 27 செஞ்சூரி அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் 2 டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த டெஸ்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு 131 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 27-வது சதமாகும்.
இதன்மூலம் அவர் விராட் கோலி (இந்தியா), கிரேம் சுமித் (தென் ஆப்பிரிக்கா), ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) ஆகியோருடன் இணைந்தார்.
ஸ்டீவ் சுமித் 136 இன்னிங்சில் 27-வது சதத்தை எடுத்தார். இதன்மூலம் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக அதிவேகத்தில் டெஸ்டில் 27 செஞ்சுரி அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.