அதிரடி ஆட்டம்: விராட் கோலி சாதனையையே முறியடித்த 'ஹிட் மேன்' -அதிர்ச்சியில் ரசிகர்கள்?

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team ICC World Cup 2023
By Jiyath Oct 15, 2023 06:06 AM GMT
Report

கிரிக்கெட்டில் இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.

இந்தியா வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

அதிரடி ஆட்டம்: விராட் கோலி சாதனையையே முறியடித்த

இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை 191 ரன்களுக்கு வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

World Cup: பாக். வீரருக்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்கள் - அமைச்சர் உதயநிதி கண்டனம்!

World Cup: பாக். வீரருக்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்கள் - அமைச்சர் உதயநிதி கண்டனம்!

ரோஹித் ஷர்மா சாதனை

சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 36 பந்துகளில் அரை சதம் அடித்து, 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டு ஆட்டம் இழந்தார்.

அதிரடி ஆட்டம்: விராட் கோலி சாதனையையே முறியடித்த

ஆனால் கேப்டனாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவராக இருந்த விராட் கோலி சாதனையை முறியடித்து ரோஹித் ஷர்மா தனது பெயரை பதித்துள்ளார்.

அந்த பட்டியலில், ரோகித் சர்மா 86 ரன்கள் அகமதாபாத் 2003, விராட் கோலி 77 ரன்கள் மான்செஸ்டர் 2019, முகமது அசாருதீன் 59 ரன்கள் மான்செஸ்டர் 1999, முகமது அசாருதீன் 42 ரன்கள் சிட்னி 1992, முகமது அசாருதீன் 27 ரன்கள் பெங்களூரு 1996, ஆகியோர் உள்ளனர்.