லப்பர் பந்து கெத்து மொமண்ட்..Recreate செய்த ரிஷப் பந்த் - வைரல் வீடியோ!
டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தின் செயலை ‘லப்பர் பந்து’படத்தின் கெத்து கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லப்பர் பந்து
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’.இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமணன் குமார் தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.
இந்த படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . இந்த படத்தில் தினேஷ் கிரிக்கெட் வீரராக கெத்து கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் கிரிக்கெட் போட்டியின் போது ஒவ்வொரு டீமையும் வெளுத்து வாங்கும் கெத்து கடைசி பந்தில் வேண்டுமென்றே அவுட் ஆவது போல் காட்டப்பட்டிருக்கும். அதற்கு “விக்கெட் எடுத்தவன் குதிக்கிறதைப் பாக்குறதுல கெத்துக்கு ஒரு போதை” என்று சொல்லப்பட்டிருக்கும்.
ரிஷப் பந்த்
இது போன்ற சம்பவம் பெங்களூரு டெஸ்டில் ரிஷப் பந்த்-க்கு நடந்துள்ளது. ஆம் நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டி நடந்தது . இதில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியில் ரிஷப் பந்த் எதிரணி பவுலர்களைப் பொளந்து எடுத்திருப்பார்.
அப்போது சதம் எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 99 ரன்களில் ஆட்டமிழந்தார் . 99 ரன்களில் அவுட் ஆகி வெளியேறும்போது சோகமாக இருக்காமல், சற்று புன்னகைத்துவிட்டு ரிஷப் பந்த் செல்வார் ரிஷப் பந்த்.
இந்தக் காட்சிகள் அப்படியே கெத்து தினேஷின் காட்சிகளுக்கு ஒத்துப்போயிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.