ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. இந்திய அணி இன்று அறிவிப்பு - யாருக்கு வாய்ப்பு?

Cricket India Indian Cricket Team
By Vidhya Senthil Jan 18, 2025 06:45 AM GMT
Report

   சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

   சாம்பியன்ஸ் டிராபி

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹைபிரிட் மாடலில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகள் இடம்பிடித்துள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி

பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன.இதனையடுத்து ஒவ்வொரு அணிகளும் தங்களின் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி 2025; கோலி கிடையாது - பதிலுக்கு இந்த வீரரா?

சாம்பியன்ஸ் டிராபி 2025; கோலி கிடையாது - பதிலுக்கு இந்த வீரரா?

அந்த வகையில் இந்திய அணி வீரர்களின் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில், இன்று அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி

மேலும் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் நண்பகல் 12.30 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி

குறிப்பாகக் கம்பீரின் வருகைக்குப் பிறகு இந்திய அணி சில மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு யாரைத் தேர்வு செய்யப்போகிறார்கள், யாரை அணியிலிருந்து நீக்கப்போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.