கிரெடிட் கார்டை வைத்து EMI Pay பண்ணலாமா? என்னென்ன விளைவுகள்!
கிரெடிட் கார்டுகளை வைத்து பணம் செலுத்தும் நன்மை, தீமைகளை தெரிந்துக் கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டுகளை அனுமதிக்கும் வங்கிகளில் அதன் மூலம் EMI செலுத்தலாம். இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னவென்றால்,
கிரெடிட் கார்டுகளை வைத்து உடனடியாக பேமெண்ட் செலுத்தும் போது அபராதங்களைத் தவிர்க்கலாம். ரிவார்ட் பெற உதவும். இருப்பினும் அனைத்து கிரெடிட் கார்டுகளும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகைகளை வழங்குவதில்லை.
விளைவுகள்
இதில் இருக்கும் விளைவுகளை பார்த்தால், பர்சனல் லோன் மற்றும் பிற வகையான கடன்களுடன் ஒப்பிடும்போது கிரெடிட் கார்டுகள் அதிக வட்டி விகிதங்களை கொண்டிருக்கும். கொடுக்கப்பட்ட காலகட்டத்திற்குள்
முழு கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையையும் உங்களால் செலுத்த முடியாமல் போனால் வட்டி கட்டணங்கள் அதிகரித்து உங்கள் ஒட்டுமொத்த கடன் தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கிரெடிட் கார்டை வைத்து கட்டணம் செலுத்தும் போது சில மறைமுக கட்டணங்களும் இருக்கலாம்.
நுணுக்கமான சில பாலிசிகளையும் கவனமாக தெரிந்து கொள்வது முக்கியம். இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, அவசர காலங்களில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இஎம்ஐ செலுத்துவது பாதிப்பில் இருந்து தப்பிக்க வைக்கும்.