கிரீம் பன் விவகாரம் எதிரொலி..திண்பண்டங்களுக்கு 5% வரி - ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடி!
அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 5% மட்டுமே ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கிரீம் பன் விவகாரம்
கோவாவில் 2 நாட்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை பகுத்தறிவு செய்யும் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விரைவில் நடைபெறவுள்ள 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு அடித்தளமாக இந்த கூட்டம் நடந்தது. இதில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்,
கிரீம் பன் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் மற்றும் திண்பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் 5% வரை விகிதத்திற்கு கொண்டுவர வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர்கள் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த உணவுப் பொருட்கள் 5 சதவிகித ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதன் மூலம் என்ன வகையான தாக்கங்கள் இருக்கும்,
மாநிலங்களின் வருவாய் பகிர்வு பாதிக்கப்படுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கிரீம் பன் உள்ளிட்ட உணவு பொருட்களை மீதான வருவிகிதத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.
ஜிஎஸ்டி கவுன்சில்
இந்த நிலையில், அதற்காக பல்வேறு ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் மத்திய அமைச்சர்கள் குழுவும் மேற்கொண்டது. இதேபோல் பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வரி விகிதம் தற்போது 12% ஆக உள்ள நிலையில்,
அதனையும் 5% குறைக்க வேண்டும் என இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது நான்கு வரி விகிதமுறையை பின்பற்றப்படும் நிலையில் மூன்றாக குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதே.
அதே சமயம் உடல் நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரிவுக்கான ஜிஎஸ்டி விலக்கு மற்றும் குறைப்பு குறித்து எந்த முடிவும் நேற்றைய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ரூ. 1000 மேல் இருக்கும் ஆடைகளுக்கான வரி விகிதம் 5% ஆக உள்ள நிலையில்
அதனை 12% அல்லது 18 % ஆக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக வருகிற 19, 20-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.