திடீரென சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Plane Crash
By Nandhini Aug 22, 2022 01:14 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று போக்குவரத்து மிகுந்த சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்

அமெரிக்கா, ஃப்ளோரிடா மாகாணத்தில் வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் திடீரென எரிபொருள் தீர்ந்தது.

இதனையடுத்து, அந்த சிறிய ரக விமானம் போக்குவரத்து மிகுந்த சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் பிழைத்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் இது குறித்து அவர் பேசுகையில், விமானத்தில் இருந்த ரேடியோ பழுதாகி இருந்ததால் தன்னால் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.     

crashed-small-plane