மக்களவை தேர்தல் - மீண்டும் களமிறங்கும் சு.வெ..! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்..?
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிடுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.
திமுக கூட்டணி
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள், மக்கள் நீதி மய்யம், இந்தியன் முஸ்லீம் லீக் என பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தொகுதி பங்கீடு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. கடந்த முறை அக்கட்சி போட்டியிட்ட மதுரை,
கோவையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இம்முறை மதுரையில் மீண்டும், திண்டுக்கல் போன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அவர்களது வேட்பாளர்கள் அறிமுகம் இன்று நடைபெற்றது. அதன் படி, கடந்த முறை மதுரையில் வெற்றிபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்குகிறார்.
திண்டுக்கல் தொகுதியில் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.