தமிழிசை ராஜினாமா; சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு - யார் இவர்?

Smt Tamilisai Soundararajan Telangana Puducherry
By Sumathi Mar 19, 2024 06:37 AM GMT
Report

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் ஆளுநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

tamilisai soundararajan - cp radhakrishnan

மேலும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழிசை தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

மீனை சைவ உணவாக்கனும்; எளிதில் விட்டுட முடியாது - விடாமல் வலியுறுத்தும் தமிழிசை செளந்தரராஜன்!

மீனை சைவ உணவாக்கனும்; எளிதில் விட்டுட முடியாது - விடாமல் வலியுறுத்தும் தமிழிசை செளந்தரராஜன்!

ஆளுநர் பொறுப்பு

முன்னதாக, கடந்த தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக போட்டியிட்ட தமிழிசை தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை ராஜினாமா; சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு - யார் இவர்? | Cp Radhakrishnan Charge Of Telangana Puducherry

இந்நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அவர் கூடுதல் பொறுப்புகளை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.