சாலையின் குறுக்கே திடீரென வந்த மாடு -தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி!
நெல்லை தியாகராஜ் நகரில் சாலையின் குறுக்கே திடீரென வந்த மாடு மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவி காயம் அடைந்துள்ளார்.
நெல்லை
நெல்லை மாவட்டம் திருமால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி சுவாதி. இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரிக்குச் செல்வதற்காக தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது தியாகராஜர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில் மாணவி சாலையில் துக்கி வீசப்பட்டார்.
இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவி சுவாதி படுகாயம் அடைந்தார். இந்த காட்சிகள் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
தற்போது மாணவி மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்பு கோரிக்கை வைத்து வரும் நிலையில் மாணவி ஒருவர் மாடு மோதி விபத்தில் சிக்கிக் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.