மீண்டும் கொரோனா; இனிதான் மெயின் பிக்சர் - 27 நாடுகளில் பரவல்!
கோவிட் வைரஸின் புதிய வகை 27 நாடுகளில் பரவியுள்ளது.
எக்ஸ்.இ.சி (XEC)
சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியது. உலகம் முழுவதும் கோடி பேரை பலி கொண்டது. அதன்பின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பழைய நிலை திரும்பியது.
இருப்பினும் தொடர்ந்து கொரோனா வைரஸின் பல வகைகள் உருவானது. இந்நிலையில், ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய வகை,
அதிவேக பரவல்
இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், சீனா உட்பட 27 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வகை முந்தைய ஒமிக்ரான் வகையில் இருந்து உருவானது.
சளி அல்லது காய்ச்சல், அதிக உடல் வெப்பம், உடல் வலி, சோர்வு, இருமல் ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. இந்தியாவில் இருந்து இதுவரை XEC பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்த வகையால் மனிதர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி விரைவில் ஆதிக்கம் செலுத்தும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.